விராட் கோலி 40 வயது வரை ஆடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      விளையாட்டு
Sunil Gavaskar 2018 10 30

புதுடெல்லி,இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிக வேகத்தில்...இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தற்போது ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்னை அதிக வேகத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டியில் 14 ஆட்டத்தில் விளையாடி 1,202 ரன் எடுத்துள்ளார். சராசரி 133.55 ஆகும்.இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர் பாக அவர் கூறியதாவது., விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும். விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரைவிளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து