முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 தொகுதிகளிலியே திருப்பரங்குன்றம் தான் முதன்மை வாக்குகளை பெற்று தந்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் வி.வி.ராஜன்செல்லப்பா சூளுரை

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -நடைபெறும் 20 சட்டமன்ற இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம்  தொகுதி தான் அ.தி.மு.க.விற்கு முதன்மை வாக்குகளை பெற்று தந்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சூளூரைத்து பேசினார்.
மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை கிழக்கு தொகுதி, ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நல்லாசியுடன் தீபாவாளி பரிசுகளை மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க. சார்பாக மாவட்ட  அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கில் ரமேஷ், பொதுகுழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் ராமகிருஷ்ணன், தக்கார்பாண்டி, முருகேசன், ஒன்றிய கழக துணை செயலாளர் நிலையூர்முருகன், முனியாண்டி, திருப்பாலை ஜீவானந்தம், புதூர் அபுதாகீர், மானகிரி மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.பேசியதாவது:-
 அம்மாவின் நல்லாசியுடன் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த ஆட்சி ஒருவாரம் தாங்காது என்று எதிர்கட்சிகள் கூறியபோது அதையெல்லாம் தகர்த்து எரிந்து இன்று 18 மாதங்கள் கடந்து சிறப்பாக ஆட்சி நாம் நடத்தி வருகிறோம். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் பூர்த்தி செய்து மட்டுமல்லாது அடுத்து வரபோகும் சட்டமன்ற பொதுதேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம்.
எதிர்கட்சிகள் அரசியல் பிழைப்பிற்காக தினந்தோறும் பொய்யான பிரச்சாரங்களை பரப்பிவருகின்றனர் அதை எல்லாம் நாம் முறியடிக்கவேண்டும். தற்போது 18 சட்டமன்ற தேர்தலை சேர்த்து நாம் 20 சட்டமன்ற இடைத்தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். இதில் திருப்பரங்குன்றம் தொகுதி தான் முதன்மையான வாக்குகளை  அ.தி.மு.க.விற்கு பெற்று தந்தது என்று வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். தற்போது தீபாவாளி திருநாள் வருகிறது. உங்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து