வெள்ளை மாளிகையில் வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இல்லை: 15 வருடங்களாக பின்பற்றிய நடைமுறை கைவிடப்பட்டது

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
trump 03-11-2018

நியூயார்க், அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை.

அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2003-ம் வருடம் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். அவருக்குப் பின் வந்த அதிபரான ஓபாமாவும் தடையின்றி அதனை அப்படியே தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை. தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த வருடம் கூட வெள்ளை மாளிகையின் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடினார். ஆனால் தற்போது அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. திங்கள் கிழமை வரை பிரசாரம் நடைபெற்ற நிலையில், செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக இம்முறை 15 வருட பாரம்பரியத்திற்கு மாற்றாக தீபாவளி இந்த வருடம் கொண்டாடப்படவில்லை.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து