முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில்லை- மனோ கணேசன் எம்.பி திட்டவட்டம்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கை அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைய வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் நிராகரித்தோம் என இலங்கையைச் சேர்ந்த மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.

இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்திருந்தார். இதனிடையே, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க இலங்கை அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இருப்பினும், இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத் தலைவராக தினேஷ் குணவர்த்தனா பொறுப்பற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இலங்கை அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைய வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் நிராகரித்தோம் என இலங்கையைச் சேர்ந்த மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 எம்.பி.க்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து