முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 வங்கிகளை சேர்ந்த 8,000 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருட்டு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பெடரல் விசாரணை முகமையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்ததையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. கடந்த அக்டோபர் 27, 28 தேதிகளில் சுமார் 12 வங்கிகளைச் சேர்ந்த 8,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேங்க் இஸ்லாமியிலிருந்து ரூ.2.6 மில்லியன் தொகை திருடப்பட்டுள்ளது. சர்வதேச பேமெண்ட் கார்டுகள் மூலம் இந்தத் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து பேங்க் இஸ்லாமி தனது ஆன்லைன் வர்த்தக நடவடிக்கை, கார்டு சிஸ்டம் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் களவாடப்பட்ட 2.6 மில்லியன் ரூபாய்களை வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கியே செலுத்தி விட்டது என்று பேங்க் இஸ்லாமி தெரிவித்தது. கான் ஆய்வுமையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தன் கணக்கிலிருந்து ரூ.30 லட்சம் திருடப்பட்டுள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.  எப்.ஐ.ஏ. சைபர் கிரைம் அதிகாரி மொகமத் ஷோயப் கூறும்போது, பெரும்பாலான பாகிஸ்தானிய வங்கிகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து