முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் அதிநவீன டிப்பர் ஆட்டோ:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் டிகல்லுப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்திடும் அதிநவீன டிப்பர் ஆட்டோவினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்ததுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்திடும் பணிகளுக்காக ரூ.5.6லட்சம் செலவில் அதிநவீன டிப்பர் ஆட்டோ வாங்கப்பட்டுள்ளது.இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்திடும் டிப்பர் ஆட்டோவின் துவக்கவிழா நேற்று முன்தினம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன்,பேரையூர் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சசிகலா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் செயலாளர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்திடும் அதிநவீன டிப்பர் ஆட்டோவினை தொடங்கி வைத்தார்.பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒருபகுதியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதை தொடர்ந்து விழாவில் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் பேசியதாவது: மக்களின் சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து மக்களின் நலன் காத்திடும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.கடந்த 18 மாதங்களில் 38ஆயிரம் தடைகற்களை கடந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அம்மாவுடைய அரசு சரித்திர சாதனை படைத்து வருகிறது.வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திடும் வகையில் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மாவின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் கடந்த 18 மாதங்களாக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.எதற்கெடுத்தாலும் அம்மாவுடைய அரசை சிலர் குறை சொல்லி வருகிறார்கள்.தற்போது அன்னை தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுத்து எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் அம்மாவின் அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க அம்மாவின் அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.அவர்கள் தான் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். 5முறை முதல்வராக இருந்தவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.நாங்கள் லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்ட் ஆக கொடுக்கிறோம்.மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு டெங்கு இல்லாத மதுரை மாவட்டம் உருவாகிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவைதுணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,ஒன்றியச் செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன்,உலகாணி மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுகுமார்,நாகலட்சுமி,சுமதிசாமிநாதன்,பேரையூர் பேரூர்கழக செயலாளர் நெடுமாறன்,டி.கல்லுப்பட்டி பேரூர் கழக துணைச் செயலாளர் க.மீனாலட்சுமி கட்சி நிர்வாகிகள் வக்கீல்.பாஸ்கரன்,தர்மர்,மாசாணம்,ராமகிருஷ்ணன் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து