கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்-அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      ராமநாதபுரம்
7 TACTV-HD SET UP BOX-2 copy

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கேபிள்டி.வி. ஆபரேட்டர்களுக்கு எச்.டி செட்டாப் பாக்ஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு எச்.டி உயர்வரையறை செட்டாப் பாக்ஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.இதற்கான விழாவிற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி வரவேற்று பேசினார். விழாவில் செட்டாப் பாக்ஸ்களையும், பல்Nவுறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடனுதவிகளை வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிகளவிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டு களித்திட வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிட வேண்டும் என்று ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் 17.04.2017 அன்று டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் 26,823 கேபிள் டிவி ஆபரேட்டர்கள்; மூலம் 65,24,116 கேபிள் டிவி சந்தாதாரர்களும் உள்ளனர். அவற்றில் இதுவரை, 16,549 கேபிள் டிவி ஆபரேட்டர்கள்; மூலம் ஏறத்தாழ 30 இலட்சம் எண்ணிக்கையில் எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்களும், 12ஆயிரம் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களும் கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 420 உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்களும், 1,00,353 கேபிள் டிவி சந்தாதாரர்களும் உள்ளனர். அவற்றில் முதற்கட்டமாக 79,000 எஸ்.டி. செட்;டாப் பாக்ஸ்கள் வரப்பெற்று இதுவரை 63ஆயிரம் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.125 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 180 சேனல்களும்,  ரூ.175 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 230 சேனல்களும் என இரண்டு தொகுப்புகளாக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செட்டாப்பாக்ஸ்கள் முற்றிலும் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருமுறை செயலாக்கத் தொகையாக ரூ.200 மட்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செட்டாப் பாக்ஸ்கள் மூலம், அரசுக்கு மாதத்திற்கு ரூ.42.43 லட்சம் மதிப்பில் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் தற்போது, மாவட்டத்தில் 2ஆயிரம் எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்கள், எச்.டி ஒளிபரப்பு சேவையை விரும்பும் சந்தாதாரர்களுக்கு ரூ.500-க்கு உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு தொகுப்பு சேவைகளோடு ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 380 எஸ்.டி. சேனல்களுடன், 45 எச்.டி. சேனல்கள் என மொத்தம் 425 சேனல்களை கண்டு களித்திட முடியும்.
 பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிகளவிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டு களித்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் கீழ், உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முறையாக பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் சில பகுதிகளில் செட்டாப் பாக்ஸ்களை வழங்க பொதுமக்களிடமிருந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணம் வசூலிப்பதாக புகார் வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் அருகேயுள்ள ரகுநாதபுரம் பகுதியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முறையாக செயல்படாமல், அரசு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை விநியோகிக்க, அரசு விதிமுறைகளுக்கு எதிராக பணம் வசூலிக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
 அதன்பின்பு, அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், மாவட்டத்திலுள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்களையும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடனுதவிகளையும் வழங்கினார். இவ்விழாவில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசீலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக்அப்துல்லா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம், ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாளர்-வட்டாட்சியர் எம்.செய்யது முகம்மது உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து