சர்கார் திரைப்பட விவகராம்: விஜய்க்கு அமைச்சர் அறிவுரை

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Kadambur Raju 05-11- 2018

சென்னை : சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது வளர்ந்து வரும்நடிகர் விஜய்க்கு நல்லதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் குறித்து கோவில்பட்டியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சர்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளது. அவற்றில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல. சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. காட்சிகளைப் படக்குழுவே நீக்கி விட்டால் நல்லது. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் விவாதிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து