முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டைவிட்டு வெளியேறுங்கள்: விராட் கோலி கருத்தால் சர்ச்சை

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : வெளிநாட்டு வீரரை பிடிக்கும் என்றால் இந்தியாவில் ஏன் வசிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விடீயோ காட்சி..

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 5-ம் தேதி 30-வது பிறந்ததினத்தை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது, தனது புதிய செயலியை விளம்பரப்படுத்துவதற்கான விடியோ காட்சியை பதிவு செய்து வந்தார். அப்போது, அதில் ரசிகர்கள் பதியப்பட்டுள்ள கருத்தை வாசித்து அதற்கு பதிலளித்து வந்தார்.  அதில், ஒரு நபர் "இவர் அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்படும் வீரர். இவருடைய பேட்டிங்கில் சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை. இந்த இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதையே ரசிப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.

கடும் விமர்சனம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் கோலி கூறியதாவது, "நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. வேறு எங்காவது போய் வாழுங்கள். நமது நாட்டில் வாழ்ந்து, அடுத்த நாட்டை ஏன் விரும்பவேண்டும்?" என்றார். கோலியின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கடுமையான விமரிசனங்கள் எழுந்தது. அதில், ஒரு ரசிகர் கோலியின் முன்னாள் நேர்காணல் ஒன்றை பகர்ந்தார். அதில், அவர் தனக்கு பிடித்தமான வீரர் என்று தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ச்சலே கிப்ஸ் என்று கோலி தெரிவித்தை குறிப்பிட்டு அவரை விமரிசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து