முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதிய ஜனதா ஆதரவுடன் ஸ்ரீநகர் மேயரானார் ஜுனைத் ஆஸிம் மட்டூ

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ஜுனைத் ஆஸிம் மட்டூ பா.ஜ.க. ஆதரவுடன் ஸ்ரீநகர் மேயரானார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து ஜுனைத் ஆஸிம் மட்டூ விலகினார். 74 உறுப்பினர்கள் வாக்களித்த மேயர் தேர்தலில் 40 வாக்குகள் பெற்று ஜுனைத் ஆஸிம் மட்டு வென்றார்.காங்கிரஸ் வேட்பாளர் குலாம் ரசூல் ஹஜம் 26 வாக்குகள் பெற்றார் என்று உள்ளாட்சி அமைப்பின் ஆணையர் பீர் ஹஃபிஸல்லா தெரிவித்தார்.காங்கிரஸ் ஆதரவுடன் தேர்தலில் களம் கண்ட சுயேச்சை வேட்பாளர் ஷேக் இம்ரான் ஸ்ரீநகர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 35 வாக்குகள் பெற்றார். காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்தது.இதைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து விலகிய மட்டூ, 4 வார்டுகளில் தன்னிச்சையாக போட்டியிட்டார். அவற்றில் 3 வார்டுகளில் வெற்றி பெற்றார். இவருக்கு பா.ஜ.க.வும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியும் ஆதரவு அளித்திருந்தன.

ஸ்ரீநகர் நகராட்சித் தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்கள் மாநாடு 4 இடங்களிலும், பா.ஜ.க. 5 இடங்களிலும் வென்றது.மட்டூவின் பெயரை குறிப்பிடாமல், ஸ்ரீநகரின் மேயராக வெளிநாட்டில் படித்த ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் 35-ஏ சட்டப் பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் மக்கள் ஜனநாயகக் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் தவிர்த்தன.35-ஏ விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து