திருமங்கலம் ஒன்றியத்தில் ரூ.72லட்சம் செலவில் கிராமப்புற சாலை அமைத்திடும் திட்டங்களுக்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      மதுரை
8 tmm news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கிராமப்புற சாலை அமைத்திடும் திட்டங்களுக்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கப்பலூர் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை,அச்சம்பட்டி முதல் புதுப்பட்டி வரையிலான இணைப்புச்சாலை மற்றும் அ.வலையபட்டி முதல் புல்லமுத்தூர் வரையில் புதிய சாலைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறவுள்ளது.இதையடுத்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கிராமப்புற சாலைகள் அமைத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.கூடுதல் ஆட்சியர் அம்ரீத் முன்னிலை வகித்தார். திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் வரவேற்றார்.ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரூ.72லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் புதியசாலைகள் அமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற்றிடும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அம்மாவுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அம்மாவுடைய அரசு ஏழைகளுக்கான அரசு.அதனால்தான் அம்மாவுடைய காலத்திற்கு பின்னாலும் அம்மாவின் ஆன்மாவின் நல்லாசியுடன் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு நீரை முழுமையாக சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை முழுமையாக நாம் கட்டுப்படுத்திட முடியும். அதற்காகத்தான் வரும் முன் காத்திடும் நடவடிக்கைகளை அம்மாவுடைய அரசு செயல்படுத்தி வருகிறது.இதனால் 100சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு டெங்கு பன்றி காய்ச்சல் இல்லாத மதுரையாக உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறோம்.தீபாவளி சமயத்தில் தேங்கிய குப்பைகள் அனைத்தும் ஒரே நாளில் போர்க்கால அடிப்படையில் அகற்றி பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அம்மாவின் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.இத்தனை செய்தாலும் இந்த அரசின் மீது ஏச்சுக்களும் பேச்சுக்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இவற்றையெல்லாம் நாங்கள் என்றைக்குமே பொருட்படுத்தியதில்லை. மக்களின் நலனை காப்பதும் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதிலும் அம்மாவின் அரசு தீவிர கவனம் செலுத்தி அதிலே வெற்றி பெற்று வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் வக்கீல்.திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன்,உலகாணி மகாலிங்கம்,ராம்சாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதி சாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,கீதாஆறுமுகம்,சிவஜோதி தர்மர்,திருமங்கலம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார்,தர்மராஜ் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,பரமசிவம்,கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,அழகர்,கோடீஸ்வரன், நாகலட்சுமி, மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து