அதிமுக ஆட்சியில்தான் சாத்தூர் தொகுதி மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      விருதுநகர்
8 ktr news

.சாத்தூர் - அதிமுக ஆட்சியில்தான் சாத்தூர் தொகுதி மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், டி.கரிசல்குளம் கிராமத்தில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையத்தினை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசும்போது, தமிழக மக்களின் நலன் கருதி ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து நிறைவேற்றி வருகின்றார். கரிசல்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கிராம ஊராட்சி சேவை மையமானது பொதுமக்கள் சான்றிதழ் பெற வேண்டி தொலைதூரங்களுக்கு செல்வதையும், பயண நேர காலங்களை குறைத்தும், அலைச்சலை தவிர்த்தும் பொதுமக்களின் இருப்பிடம் தேடி சான்றிதழ்கள் வழங்கும் மையமாக செயல்படும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டு இக்கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட வழிவகை செய்கிறது. மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் விதமாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு சார்ந்த பயிற்சிகள் நடத்த போதிய இடவசதி உள்ளதாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில்தான் வெம்பக்கோட்டை தனித்தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சாத்தூர் புதிய வருவாய் கோட்டமாக உருவாகியுள்ளது. சாத்து]ரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே புதிதாக ரூ.13கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதி முழுவதும் சிமெண்டு சாலைகள், குடிநீர் தொட்டி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சமுதாய கூடங்கள், கலையரங்கம், பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட பல பணிகள் நடைபெற்றுள்ளன. பாதாள சாக்கடை திட்டம், இருக்கன்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. தாமிரபரணிக்கூட்டுக்கூடிநீா் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. சாத்தூர் கிராமங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தி்ல் தாமிரபரணி தண்ணீா் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் நேரடியாக திறந்து வைப்பார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வரும் தமிழக அரசிற்கு தொகுதி மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்எல்ஏஎ, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார; திட்ட இயக்குநா; (மாவட்ட ஊரக வளார்ச்சி முகமை) சுரேஷ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து, வட்டாட்சியர்கள் .ராஜ்குமார்(வெம்பக்கோட்டை), சாந்தி(சாத்தூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கம்மாள், ராஜசேகன்(சாத்தூர்) அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், கூட்டுறவு சங்க தலைவர் குறிஞ்சியார்பட்டி மாரியப்பன், ஆலங்குளம் அழகர்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து