முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் சேர்ப்பு?

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க, ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஒப்புக்கொண்டனர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

தடை உத்தரவு

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.  ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.

தொடர் தோல்வி

இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் படு தோல்வி அடைந்தது. இப்போது தென்னாப்பிரிக்க அணியுடனும் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் மோத உள்ளது. இந்திய அணி இந்த மாதம் 21ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அங்கு விளையாட உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், ஸ்மித், வார்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பரிசீலனை...

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் பீவெர் மீண்டும் மறுத்தார். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவர் பதவி விலகினார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.

கிரிக்கெட் வாரிய  அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, ''வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலிக்கப்படும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதனால் இந்திய தொடர் தொடங்குவதற்குள் அவர்கள் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து