முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான முதல் டி-20: நியூசி. அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச் சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

பாக். சாதனை

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது.  இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. முன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.

நியூசி. வெற்றி

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களும் டாம் லாதம் 68 ரன்களும் எடுத்தனர்.   பாகிஸ்தான் தரப்பில் ஷகின் ஷா அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 4 விக்கெட் டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் 47.2 ஓவரில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

‘ஹாட்ரிக்’ சாதனை

பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 69 ரன்களும் இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நியூலாந்து அணி வெற்றிபெற்றது. போட்டியில், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது நியூசிலாந்து வீரர் இவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து