20 தொகுதிகளில் இடைத்தேர்தல் : பிரச்சார பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
eps ops 21-09-2018

சென்னை,20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் தேர்தல் பிரசார பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 20 தொகுதிகளுக்கும் அண்மையில் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்க கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இப்போது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முதல்வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர் உள்ளிட்டோரை முறைபடுத்தி ஒருங்கிணைத்து அ.தி.மு.க. சார்பில் பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பிரசாரக்குழு பொறுப்பாளராக அ.தி.மு.க. கொள்கைப்பரப்பு துணை செயலாளரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து