கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி சிறையிலிருந்து விடுதலையா? பாகிஸ்தான் அதிகாரிகள் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
paki womwn 09-11-2018

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்:, ஆசியா பீபி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவர் நெதர்லாந்து நாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும் வெளியான செய்திகள் போலியாக புனையப்பட்டவை என்று தெரிவித்தனர். மத நிந்தனை வழக்கில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஆசியா பீபிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம்  ரத்து செய்து, அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவருக்கு வெளியேற்றத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஒப்புக் கொண்டது. அதையடுத்து, போராட்டதைக் கைவிடுவதாக தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் கட்சி கடந்த வாரம் அறிவித்தது.இந்த நிலையில், ஆசியா பீபி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும், அவரை பாகிஸ்தானை விட்டு நார்வே நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து