முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கருப்பு பணத்தை மீட்பதாகவும்,கள்ள நோட்டுக்களை ஒழிப்பதாகவும் கூறிக்கொண்டு இந்தியாவின் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களான ரூ.1000,ரூ.500 நோட்டுக்கள் அனைத்தும் செல்லாது என்று கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஏழை,எளிய மக்களை பெரிதும் பாதித்திடும் வகையில் பல்வேறு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி விட்டது.இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு சீரழிந்ததுடன் பொதுமக்களை வங்கிகளின் வாசலில் தவிக்கவிட்டது.பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினத்தை நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கறுப்புதினமாக அனுஷ்டித்து வருகின்றனர்.தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டு நிறைவடைவதையடுத்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருமங்கலம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும்,நிர்வாகிகளும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும்,பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் பேசுகையில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில்மக்கள் விரோத பாஜக அரசு தோற்கடிக்கப்படுவது நிச்சயம்.அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்பது உறுதி என்று தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் கண்ணன்,பாண்டியன்,உசிலைமகேந்திரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் பிருதிவிராஜ்,வட்டார தலைவர்கள் முருகேசன்,இள்கோவன்,முத்துவேல்,தளபதிசேகர்,ராமராஜன்,சங்கையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் தாமோதரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து