சிக்கலில் தவிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார்: ஷேன் வார்னே

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      விளையாட்டு
warner 2018 3 29

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

விளையாட தடை

ஆஸ்திரேலியா அணி கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற போட்டியின்போது பான்கிராப்ட் பந்தை உப்புத்தாளால் சேதப்படுத்தினார். இதற்கு மூளையாக செயல்பட்டவர் துணைக்கேப்டன் வார்னே என்பதும், இந்த விஷயம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரிந்தே நடந்தது என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் பான்கிராப்டிற்கு 9 மாதமும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி சர்வதேச அளவில் திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் மூவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

குற்றச்சாட்டு

இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடையை நீக்க பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில்தான் சிட்னியை மையமாகக் கொண்ட நெறிமுறை மையம், ‘‘திமிரான போக்கு மற்றும் கிரிக்கெட்டை கட்டுக்குகள் வைத்துக் கொள்வது போன்ற கலாச்சாரத்தின் அடிப்படையில், எப்படியாக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களிடம் விதைத்ததே ஆட்சிமன்ற குழுதான்’’ என்று குற்றம்சாட்டியிருந்தது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான தலைவர்கள் தங்களை பதவிகளில் இருந்து விலகி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஆன வார்னே, இக்கட்டான நிலையில் தவிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று கூறியுள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து