ஐ.பி.எல். தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் - கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      விளையாட்டு
virat kohli 2018 10 30

Source: provided

புதுடெல்லி :  உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஐ.பி.எல். தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தயாராவது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேண்டுகோள்

இதில் விராட் கோலி பேசும்போது, அடுத்தடுத்த தொடர்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைவார்கள். இதனால் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவது சிறந்த முடிவாக இருக்கும். இல்லையென்றால் 7 அல்லது 8 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து