முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் அமெரிக்க துணை அதிபர்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் யு.எஸ் - ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, பப்புவா நியூ கீனியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், இன்று முதல் 18-ம் தேதி வரை சிங்கப்பூர், பப்புவா நியூ கீனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.இந்தப் பயணத்தின்போது, சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பப்புவா நியூ கீனியா பிரதமர் பீட்டர் ஓ நீல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோரை மைக் பென்ஸ் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து