முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிம்சைக்கான குரலாக இந்தியா எப்போதும் இருந்துள்ளது: வெங்கையா

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நீண்ட நெடுங்காலமாக அமைதி மற்றும் அகிம்சைக்கான குரலாகவே இந்தியா எப்போதும் இருந்துள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள யுனெஸ்கோவில் இந்திய வம்சா வளியினர் இடையே நேற்று முன்தினம் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் வினய் மோகன் வத்ரா மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். வளர்ச்சிக்கு அமைதி மட்டுமே முன்தேவை என்று கூறிய துணை ஜனாதிபதி, ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் உலகத்தில் பேச்சு வார்த்தை மற்றும் புரிந்துணர்வு மூலமே வளர்ச்சியை சாதிக்க முடியும் என்றார். நீண்டகாலமாக பிரான்சுடன் இருக்கும் வளமான பரஸ்பர உறவு குறித்து அங்குக் கூடியிருந்தோருக்கு நினைவுபடுத்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ரவீந்திரநாத் தாகூரின் அறிவுச் செல்வாக்கு, பிரான்ஸ் நாட்டின் சிந்தனையாளர்கள் பலருக்கு ஈர்ப்பாக அமைந்ததை அறிவோம் என்றார்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் என்பது தேச அளவில் திறமையான இசைவான சந்தையை உருவாக்குவதில், முக்கிய நடவடிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வணிகத்தை நிறுவுவதற்கும் வளர்ப்பதற்கும் இது எளிய வழியாக இருக்கும் என்றும் கூறினார். புதிய இந்தியா உருவாக்கத்தில் இந்திய வம்சாவளியினர் தீவிரப் பங்களிப்பைச் செலுத்துமாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குமான நேரத்தையும் பொருத்தமான வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து