முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,சட்ட விரோதமாக பணம், நகை பறிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் உள்ள மத்தியப் குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்துள்ளர்.

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ரூ. 600 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக ஹாம்பிடென்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான பெங்களூரைச் சேர்ந்த சையத் அகமது பிரீத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தன் மீதுள்ள வழக்குகளை சாதகமாக்க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது உதவியாளர் அலிகான் ஆகியோருக்கு ரூ. 20 கோடி வரை பணம் கொடுத்ததாக சையத் அகமது பிரீத் ஒப்புக்கொண்டார்.

மேலும், ஜனார்தனரெட்டி, அவரது உதவியாளர் அலிகான் கேட்டுக் கொண்டதற்கு இணையாக தங்கத்தையும், பெல்லாரியைச் சேர்ந்த தங்கநகைக் கடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் மூலம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.இதனிடையே, ஜனார்தன ரெட்டி தலைமறைவானார். அவரை பெங்களூரு, பெல்லாரி, ஐதராபாத்தில் போலீசார் 2-வது நாளாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பெல்லாரி சிரகுப்பாசாலையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அவரது இல்லத்தில் போலீசார் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து