முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறை : விண்ணப்பிக்க மேலும் 5 நாட்களுக்கு அரசு அனுமதி

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை அளிப்பதற்கு மேலும் 5 நாட்கள் அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியோரின் நலன்களைகாக்கும் நோக்கிலும், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு அடிப்படைஉள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் வகையிலும் அத்தகைய அங்கீகரிக்கப்படாதமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்த ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுஅரசாணை (நிலை) எண்.78, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மூலம் விதிகள் வெளியிடப்பட்டது. மேற்கூறிய விதிகளில், அங்கீகரிக்கப்படாதமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க ஆறுமாத காலக்கெடு அதாவது 3ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது. அக்காலக்கெடு, 3ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

5 நாட்களுக்கு... அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளைவரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாக இருந்தது. மேலும் கடந்த 6-ம் தேதி வரை தீபாவளியை முன்னிட்டு விடுமுறை நாட்களாக இருந்தது. அதனால், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த குறுகிய கால வாய்ப்பு கோரிவிண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படியே அரசு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்துவதற்கு விண்ணப்பங்களை இணையதளம்வழியாக 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி அளிக்க முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து