முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ஒன்றியத்தில் ரூ.1கோடி செலவில் தார்ச்சாலை அமைத்திடும் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு பகுதிகளில் ரூ.1கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலைகள் அமைத்திடும் திட்டங்களுக்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் ஒன்றிய மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் ரூ.1கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம் கிராமத்திற்கு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.28லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை மற்றும் கீழக்கோட்டை கிராமத்திலிருந்து மல்லம்பட்டி கிராமம் வரையில் ரூ.72லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை என ரூ.1கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்திடும் பணிகள் நடைபெறவுள்ளது.அதன்படி மறவன்குளம் மற்றும் கீழக்கோட்டை-மல்லம்பட்டி பகுதியில் புதிய தார்ச்சாலைகள் அமைத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை கூடுதல் கலெக்டர் அம்ரீத்  தலைமை வகித்தார்.உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் வரவேற்றார்.ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரூ.1கோடி மதிப்பீட்டில்  புதியசாலைகள் அமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக மறவன்குளம் மற்றும் கீழக்கோட்டை கிராமத்திற்கு வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கிராமமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் வக்கீல்.திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் வக்கீல். அன்பழகன்,உலகாணி மகாலிங்கம்,ராம்சாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதி சாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன், கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், செல்வகுமார்,கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன், கண்ணன், சிவன்காளை,அழகர்,கோடீஸ்வரன், பாஸ்கரன்,நாகலட்சுமி, மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து