முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் ஒரு ஊழல் வழக்கில் பாக். எதிர்க்கட்சி தலைவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீபை, மேலும் ஓர் மோசடி வழக்கில் ஊழல் தடுப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.ஏற்கெனவே, குடியிருப்புத் திட்ட மோசடி வழக்கில் ஷாபாஸை கடந்த மாதம் 5-ம் தேதி கைது செய்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், அவரது காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்குமாறு லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்திடம் கோரினர்.அப்போது, ரம்ஜான் சர்க்கரை ஆலை வழக்கில் புதிதாக அவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, ஷாபாஸை வரும் 24-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து