முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது பந்துவீச்சை பி.சி.சி.ஐ. அங்கீகரிக்க வேண்டும்: சிவா சிங்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லக்னோ :  தனது பந்துவீச்சுக்கு பி.சி.சி.ஐ. அங்கீகாரம் தர வேண்டும் என  உபி. பந்துவீச்சாளர் சிவா சிங் கோரியுள்ளார்.

மேற்கு வங்கத்துக்கு எதிராக நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோர் சிகே. நாயுடு கோப்பை போட்டியில் சிவா சிங் 360 டிகிரி சுற்றி பந்துவீசினார். ஆனால் நடுவர் அதை டெட்பால் என அறிவித்தார். எனினும் சிவா சிங்கின் பந்துவீச்சு சமூகவலைதளங்களில் பிரபலமடைந்து விட்டது. இது தொடர்பாக சிவா சிங் கூறியதாவது-

எனது பந்து வீச்சுக்கு பி.சி.சி.ஐ. அங்கீகாரம் தர வேண்டும். விஜய் ஹஸாரே கோப்பை போட்டியிலும் இதே முறையில் தான் பந்து வீசினேன். பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க விதிகளை மீறி விளையாடும் நிலை உள்ளது. ஆனால் எனது பந்துவீச்சு சாதாரணமுறையில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து