முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் மே. வங்க பா.ஜ.க. மகளிரணி தலைவர் சர்ச்சை பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மால்டா,பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத்தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என்று மாநில மகளிர் அணித் தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி பேசியுள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் ரத யாத்திரைகளை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று ரத யாத்திரைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பேரணிகளை பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் எனவும், இறுதியாக கொல்கத்தா நகரில் நடக்க உள்ள மாபெரும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என்று மாநில மகளிர் அணித் தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி பேசியுள்ளார்.

மால்டாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவரான லாக்கெட் சாட்டர்ஜி, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுக்க எண்ணுபவர்களின் தலைகள் அந்த ரதச் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் எனக் கூறினார். அவரது பேச்சுக்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து