முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தார் படேல் சிலையைக் காண ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் வருகை

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையைக் காண   நேற்று முன்தினம் 27 ஆயிரம் பேர் வருகை தந்தனர். சிலை திறக்கப்பட்டதில் இருந்து இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வந்தது இதுவே முதன்முறை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

குஜராத்தின் சரோவர் நீர்த்தேக்கம் அருகே 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 33 மாதங்களில் நிறைவடைந்தன.

சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் கட்டுமானத்துக்குகு 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு கட்டுமான பொருள்கள், 1,700 டன் வெண்கலம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.  

இதையடுத்து, உலகிலேயே உயரமான சிலையாக கருதப்பட்டு வந்த சீனாவின் "ஸ்பிரிங் டெம்பிள்' புத்தர் சிலையை பின்னுக்குத் தள்ளி சர்தார் வல்லபபாய் படேல் சிலை புதிய சாதனையை படைத்தது. இந்த பிரம்மாண்ட சிலையின் உள்பகுதியில் 200 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் சென்று அங்கிருந்தபடி சாத்புரா, விந்திய மலைப்பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். சர்தார் சரோவர் நீர்த்தேக்கம், கருடாஸ்வேர் நீர்த்தேக்கம் ஆகியவற்றையும் பார்வையிடலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து