முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் போர் விமானத்தின் விலை தேசிய ரகசியமா? ராகுல் காந்தி கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர்,ரபேல் போர் விமானத்தின் விலை என்ன என்பது தேசிய ரகசியமா? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதன் விலை விவரத்தை உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:ரபேல் விமானம் ஒன்றின் விலை என்ன என்று பிரதமர் மோடிக்குத் தெரியும். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிராங்சுவா ஹொலாந்த், தற்போதைய அதிபர் மேக்ரான் ஆகியோருக்கும் தெரியும். அனைத்து செய்தியாளர்களுக்கும் ரபேல் விலை என்ன என்பது தெரியும். இன்னமும் அதில் என்ன தேசிய ரகசியம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில்கூட அந்த விவரத்தை தெரிவிக்காதது ஏன்? அப்படி என்ன அதில் ரகசியம் இருக்கிறது என்று அந்தப் பதிவில் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, சட்ட சபை தேர்தலையொட்டி சத்தீஸ்கரில்  பிரசாரத்தில் ஈடுபட்டபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:8 முதல் 9 ஆண்டுகள் வரை தீவிர ஆய்வுக்கு பிறகு ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப் படை தேர்வு செய்தது. ஆனால், மோடி பிரதமரான பிறகு, ரபேல் ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி பலனடைவதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றியமைத்தார். ஒரு ரபேல் போர் விமானம் ரூ.1,600 கோடிக்கு வாங்க அவர் ஒப்பந்தம் செய்துகொண்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு போர் விமானத்தை பெற ரூ.526 கோடி விலைநிர்ணயிக்கப்பட்டிருந்தது.அனில் அம்பானி பலனடையும் வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது ஏன்? என்று பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். போர் விமானம் தயாரிப்பதில் அனில் அம்பானிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால், பிரதமர் மோடிக்கு நண்பராக இருப்பதே தகுதி என்று தெரிகிறது என்றார் ராகுல் காந்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து