முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநகர் அ.தி.மு.க. வட்ட செயலாளர் முகமது சலீம் கட்சியில் இருந்து நீக்கம் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க வட்ட செயலாளர் முகமது சலீம் என்கிற செக்கடி சலீம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர்வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீற கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திருச்சி திருநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சி மாநகர் தில்லை நகர் பகுதி 49 ஏ வட்ட செயலாளர் முகமது சலீம் என்கிற செக்கடி சலீம் இன்று(நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே அ.தி.மு.க.வினர் யாரும் இவருடன் எந்தவித் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து