முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற கலைப்பு ஏன்? அதிபர் சிறிசேனா விளக்கம்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு,இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.இலங்கை அரசியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கடந்த வெள்ளிக்கிழமை கலைத்தார். மேலும், பொதுத் தேர்தல், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அவரது நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக நல அமைப்பினரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்தது ஏன் என்பது குறித்து சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-நாடாளுமன்றத்தை வரும் 14-ம் தேதி கூட்டினால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இரு தரப்பு எம்.பி.க்களுக்கு இடையே மிகப் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக, பட்டி தொட்டியெங்கும் வன்முறை வெடிக்கும் என்றும் தகவல்கள் கிடைத்தன.மறுபுறம், அணி மாறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாகத் தகவல் கிடைத்தது.இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. மேலும், நாடாளுமன்றத் தலைவர் ஜெயசூரியாவின் செயல்பாடுகள் என்னை அதிருப்தியடையச் செய்தன. நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததைஅங்கீகரிக்கப் போவதில்லை என்று ஜெயசூரியா கூறினார்.அதன்பிறகு, பதட்டம் உருவாவதை முன்கூட்டியே தடுப்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முடிவெடுத்தேன் என்று சிறிசேனா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து