முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசியை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் குற்றவாளியை நீண்ட விசாரணைக்குப் பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊசி சொருகிய ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டதன் விளைவாக 100-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுப்போருக்கு போலீசார் தரப்பில் வெகுமதிகளும் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.இந்த சூழ்நிலையில், மிகவும் சிக்கலான விசாரணைகளுக்குப் பிறகு, ஸ்ட்ராபெரியில் ஊசியை வைத்தது தொடர்பாக 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது தீங்கிழைக்கும் விதமாக உணவுப் பொருளை பாழ்படுத்தியது தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து