முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு ஒரு பசுவை பா.ஜ.க. வழங்குமா? ஐதராபாத்தில் ஒவைஸி பேட்டி

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அஸாதுத்தின் ஒவைஸி, ஐதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தெலுங்கானா பேரவைத் தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுதோறும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. அதில் ஒரு பசுவை எனக்கு அளிப்பார்களா? அந்தப் பசுவை மிகவும் மரியாதையுடன் வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஆனால், அதை பா.ஜ.க. எனக்கு வழங்குமா என்பதுதான் இங்கு கேள்வியாகும். இது சிரிப்பதற்காக அல்ல, சிந்திக்க வேண்டியதாகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து