முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

வாரணாசி,வாரணாசியில் கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு துறைமுகத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கடல் வழியை போலவே, நதி வழிப் போக்குவரத்தையும் விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நதிகளின் வழியாக சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வதன் மூலம் குறைந்த செலவில் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். நதிகளில் பெரிய படகுகள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சிறிய அளவில் உள்நாட்டிலேயே ஆங்காங்கே துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கங்கை நதியில் வாரணாசி கரையில் முதன்முறையாக துறைமுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும், முதல்கட்டமாக மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் இருந்து வாரணாசிக்கு சரக்கு படகு போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் முதல் சரக்கு படகு நேற்று வாரணாசி வந்தடைந்தது. பெப்ஸி நிறுவனத்தின் சரக்குகள் இந்த படகில் எடுத்து வரப்பட்டு வாரணாசி துறைமுகத்தில் இறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து