முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலாக்கம், நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையால், இருகாலாண்டுகளில் மட்டுமே பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, நாட்டின் பொருளதார வளர்ச்சியை, ஜி.எஸ்.டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு ஆகியவை தடம்புரளச் செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சித்திருந்தார்.இந்நிலையில், டெல்லியில்   நடைபெற்ற "யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா'வின் 100-ஆவது ஆண்டு விழாவில், காணொலி முறையில் அருண் ஜேட்லி பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை, ஜி.எஸ்.டி அமலாக்கம் குறைத்துவிட்டதாக எப்போதுமே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி.யால், முதல் இரண்டு காலாண்டுகளுக்கு மட்டுமே பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7%, 7.7%, 8.2% என்று அதிகரித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ஜி.எஸ்.டி ஆகும்.
 இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து