முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் உருவாகி அச்சுறுத்தும் 'கஜா' புயல்: சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகருகிறது. இந்த புயல் காரணமாக அரசு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 720 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வட கிழக்காக 820 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெறுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன் பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழக கடற்பரப்பில் 15-ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகக் கன மழை...இந்த புயல் சின்னமானது சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நாளை 14-ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாருர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஆலோசனை.....இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் குறித்து மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு நடத்தினார். இதில் எடுக்கப்படவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் விக்ரம்கபூர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால், நகராட்சி நிர்வாம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத், செய்திமக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து