முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

திணறல்

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்க திணறினார். அதேபோல் டி20 போட்டியிலும் திணறி வந்தார். சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முக்கியமானது...

இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன் தவான் மீண்டும் பார்முக்கு வந்தது முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அணியின் கண்ணோட்டத்தில் முக்கியமான ஆஸ்திரேலியா தொடருக்கு முன் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது முக்கியமானது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக போட்டிங் செய்தாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முக்கியமான தொடருக்கு முன் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிக ரன்கள் குவித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சற்று நெருக்கடி

ரிஷப் பந்த் ஆடுகளம் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இது அவருக்கு சரியான தருணமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தோம். இதனால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை தவான் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக எதிர்கொண்டார்கள். எப்போதுமே இந்தியா வெளிநாடு சென்று விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலானதாகும். ஒவ்வொரு முறையில் அங்கு செல்லும்போது அணி, வீரர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசோதனையாகும். ஆஸ்திரேலியா மாறுபட்ட பந்தை கொண்ட விளையாட்டு’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து