முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நடிகர் ரஜினி ஹூரோவாக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஹூரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்தது. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில்  அவர்களைப் பற்றி கருத்தைக் கேட்கும்போது யார் அந்த ஏழு பேர் சொல்லும்போது  உண்மையிலேயே ஈழ தமிழர்களுடைய நெஞ்சில் மட்டுமல்ல ஒட்டுமொத்த  தமிழர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக இருப்பதுபோன்று இருந்தது. நடிகர்  ரஜினிகாந்த் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தாரா? அல்லது வேற்று மனிதரா- என்பது  எனக்கு தெரியவில்லை.

இதுபோன்ற கருத்தை தமிழக மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தலைவா  படம் வெளிவர சில சிக்கல்கள் இருந்தபோது நடிகர் விஜய் ஜெயலலிதாவை  சந்தித்தார்.எவ்வளவு பவ்வியமாக சந்தித்தார் என்ற தகவலை சமூக வலைத்தளங்களில்  நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனை அடிப்படையாக வைத்துத்தான் நடிகர்களுக்கு குளிர்விட்டுபோச்சு என்ற கருத்தை தெரிவித்தேன்.வேறு ஒன்றும் இல்லை. யார்  முரண்பட்ட கருத்தை தெரிவிக்கின்றார்களே அவர்களுக்குத்தான் நான் சொன்னது பொருந்தும். எல்லோருக்கும் பொருந்தாது. எந்தத் தரம் தாழ்ந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. நேற்று ஒரு நிலை,இன்று ஒரு நிலை.நாளை ஒரு நிலை எடுப்பவர்களுக்குத்தான் நான் தெரிவித்த கருத்து பொருந்தும்.

குர்ஷா, குர்ஜிகா என்ற இந்திப்படம் 1978 ல் வந்தது. இந்தப் படத்தை சென்சார் போர்டு  அனுமதியுடன் வெளியிட்டார்கள். ஆனால் படம் வெளி வந்தவுடன் இது இந்திரா காந்தியை கொச்சைப்படுத்துவதுபோல உள்ளது என்று பிலிப் ரோல்களை எல்லாம் அப்போது தீயிட்டு எரித்தார்கள். இதுபோன்ற சம்பவங்களும் நாட்டில் நடந்துள்ளது. தற்போது சர்க்கார் படத்தைப் பொறுத்தவரை ஒரு மறைந்த தலைவரை புண்படுத்தக் கூடாது என்று பொதுமக்களும் தொண்டர்களும் நினைத்தார்கள். அன்று நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் உணர்வுபூர்வாக செய்தார்களே தவிர திட்டமிட்டே  உள்நோக்கத்தோடே எதையும் செய்யவில்லை. திரைப்படங்களில் விமர்சனம் என்பது ஆரோக்கியமாக இருக்கவேண்டும். திட்டமிட்டு மறைந்த தலைவர்களை புண்படுத்த வேண்டும் அவர்களின் தொண்டர்களின் மனதைக் காயப்படுத்தும் வகையில் இருந்தால் நிச்சயமாக அதற்கு இடம்கொடுக்க முடியாது. சமீபகாலமாகதான் இந்தப் போக்கு வளர்ந்துவருகிறது.

ஆரம்பக்காலத்திலிருந்து திரைப்படத்துறையின் வரலாற்றை உற்றுக்நோக்கினால் எம்.ஜி.ஆரும் சரிமற்றவர்களும் தங்களுடைய கொள்கையை தெரிவிப்பார்கள். எம்.ஜி.ஆர்   படத்தில் அவர் யாரையாவது கொச்சைப்படுத்தியுள்ளரா? திரைப்படத்தின் மூலம் நல்ல  கருத்தை சொல்லகூடியவர்கள் தான் வரலாற்றில் நிலைக்கக்கூடியவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது வியாபார நோக்கத்தோடு, தன்னைமுன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற  எண்ணத்தோடு இதுபோன்ற சிறுமைப்படுத்துகின்ற செயலைச் செய்கிறார்கள் என்றால்  நிச்சயமாக இதற்கு மக்கள் எதிர்ப்பு இருக்கும், இதுதான் நிதர்சனம்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இன்று ஒரு கருத்தை தெரிவிக்கிறார். எங்களைப் பொறுத்தவரை மக்கள்தான் இறுதி எஜமானர்கள். எங்களைப் பொறுத்தவரை மத்தியில் ஆளுகின்ற அரசு பாஜக. அண்ணா தெரிவித்தபடி மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுபோல சுயாட்சி என்ற அடிப்படையில் நாங்கள்  என்றும் எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். அந்த அடிப்படையில் நமது  மாநிலத்திற்கு தேவையான அனைத்து நிதிகளையும் நாம் பெறவேண்டும் என்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது பிரதமரை சந்திக்கிறார்.
நாங்களும்  சந்திக்கிறோம். மாநிலத்தின்வளர்ச்சிக்காக என்ற எண்ணத்தில்தான் சந்திக்கிறோம்.  அந்தக்  கட்சி இந்தக்கட்சி என்று எந்தக் கட்சியை பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை-  எந்த கட்சிக்கும் சான்றிதழ் அளிப்பதற்கு நாங்கள் சென்சார் போர்டு கிடையாது. 7 பேர் விவகாரத்தில் ரஜினிகாந்த முதலிலேயே (12-ம் தேதி) தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி தெரிவித்துள்ளார். திரைத்துறையில் அவர் ஹூரோவாக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஹூரோவா, ஜீரோவா என்பதை மக்கள்  தீர்மானிப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து