முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ததால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வருட சிறை

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சால்வடார் : எல் சால்வடார் நாட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு அந்த நாட்டு கோர்ட் 20 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. தனது கருவை அவர் கலைக்க முயன்றதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

18 வயதான அந்த பெண்ணின் பெயர் இமல்டா கோர்டஸ். இவரை இவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வளர்ப்புத் தந்தையின் அக்கிரமச் செயலால் கர்ப்பமடைந்த இமல்டா அந்தக் கருவை கருக்கலைப்பு செய்து கொண்டார். இதையடுத்து இமல்டாவை போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். அவரது வழக்கை விசாரித்த கோர்ட், சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்து கொண்டதால் இமல்டாவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இமல்டா மட்டுமல்ல எல் சால்வடாரில் கருக்கலைப்பு செய்து கொண்டதற்காக 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலரும் தாங்களாக கருக்கலைப்பு செய்து கொண்டவர்கள் கிடையாது. சிலருக்கு இயற்கையாகவே கரு கலைந்து போயுள்ளது. இவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது சால்வடார் அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து