முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன விவசாய பயன்பாட்டிற்கான தண்ணீரை தேனி கலெக்டர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி,- தேனி மாவட்டம், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதி விவசாய பயன்பாட்டிற்கான தண்ணீரை வைகை அணையிலிருந்து   மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  திறந்து வைத்தார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர்   தண்ணீரை திறந்து வைத்து, பேசும் போது தெரிவிக்கையில்,
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி-ஐஐஐ மற்றும் வைகை பூர்விக பாசனப்பகுதி-ஐஐ-ல் உள்ள 5 கண்மாய்களுக்கு 14.11.2018 முதல் 21.11.2018 வரை உள்ள 7 நாட்களுக்கு 1525 மில்லியன் கன அடியும், இதர வைகை பூர்வீக பாசனப்பகுதி ஐஐ-க்கு 23.11.2018 முதல் 27.11.2018 வரை 4 நாட்களுக்கு 631 மில்லியன் கன அடியும், பகுதி ஐ-யை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28.11.2018 முதல் 30.11.2018 வரை இரண்டு நாட்களுக்கு 69 மில்லியன் கனஅடி தண்ணீரை விரகனூர் மதகணையில் வழங்கிடவும், இதர வைகை பூர்வீக பாசனப்பகுதி ஐ-க்கு 348 மில்லியன் கனஅடி தண்ணீரை பகுதி-ஐ இல் உள்ள நிலையூர் கால்வாயில், தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும்.
 இதற்கு முன் 28.11.2015 முதல் 12.12.2015 முடிய 2589 மில்லியன் கனஅடி தண்ணீர் இராமநாதபுரத்திற்கும் (சுநயஉh-ஐஐஐ) 13.12.2015 முதல் 21.12.2015 முடிய 1063 மில்லியன் கனஅடி தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கும் (சுநயஉh-ஐஐ) 24.12.2015 முதல் 07.01.2016 முடிய 938.50 மில்லியன் கனஅடி தண்ணீர் மதுரை மாவட்டத்திற்கும் (சுநயஉh-ஐ) திறக்கப்பட்டுள்ளது. எனவே, திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வேளாண் பெருங்குடி மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற்று வாழ்வில் வளம்பெற வேண்டும் எனத்தெரிவித்தார்.
 இந்நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) பெரியாறு வைகை வடிநிலகோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், வெங்கட கிருஷ்ணன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்ரிதா, உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், பிரபு, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து