முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜாபுயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்புகுழுவினரை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சந்தித்து ஆய்வு

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-  கஜா புயல் தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் முகாமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள இந்திய கடலோர காவல்படை வீரர்களை சந்தித்து கலெக்டர் வீரராகவராவ் மீட்பு பணிகளுக்கான நவீன இயந்திரங்களை பார்வையிட்டார். இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் முகாம் நிலைய அலுவலர் கமான்டர்.எம்.வெங்கடேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர் கலெக்டர் கூறியதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம், கஜா புயல் 15.11.2018 அன்று தமிழகத்தில் உள்ள கடலூர் முதல் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என அறிவித்துள்ளது.  அதன்படி, 14.11.2018 மாலை முதல் 15.11.2018 முற்பகல் வரை காற்றின் வேகம் மிக அதிகமாகவும், கனமழை, மிக கனமழை போன்ற சூழ்நிலை நிலவும் எனவும், அதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,588 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவித்திட ஏதுவாக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்  செயல்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
 மேலும், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த 25 வீரர்கள், மாநில காவல் துறையின் சார்பாக மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சி பெற்ற 80 வீரர்கள், தீயனைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக 30 கமான்டோ வீரர்கள், செஞ்சிலுவை சங்கம் சார்பாக மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவசர கால சூழ்நிலைக்கேற்ப இவ்வீரர்கள் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதவிர, மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நமது மாவட்டத்தில் உள்ள ஐ.என்எஸ் பருந்து முகாமினுடைய இரண்டு ஹெலிகாப்படர்கள் மூலமாகவும், மண்டபம் இந்திய கடலோர காவல்படை முகாமினுடைய இரண்டு ஹோவர் கிராப்ட் மூலமாகவும் கடற்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதே வேளையில் புயல் குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
 அதன்பின்பு, இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் முகாமில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் வீர ராகவ ராவ், தென் மண்டல ஐ.ஜி. கே.பி.சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் என்.காமினி,   இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் முகாம் நிலைய அலுவலர் கமான்டர்.எம்.வெங்கடேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் கஜா புயல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார்கள். முன்னதாக, கலெக்டர் வீரராகவராவ் கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்காக தயார் நிலையில் உள்ள வீரர்களை சந்தித்து, மீட்பு பணிகளுக்கான நவீன இயந்திரங்களை பார்வையிட்டார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கே.சாமிராஜ் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து