முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்.

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில், - மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 8ம்தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் அன்னம், காமதேனு, யானை, ஆட்டு கிடாய், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி புறப்பாடும், நேற்றுமுன்தினம் சூரம்ஹார விழாவும் நடந்தது. நேற்று சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண விழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக நடந்தது. இதில் மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, பிச்சி, செவ்வரளி, மஞ்சள்செவ்வந்தி, மரிக்கொழுந்து, தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் மணவிழா மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து திருக்கல்யாண சீர்வரிசைகளும் வந்து சேர்ந்தன. பின்னர் மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி மணக்கோலத்தில் அமர்ந்திருந்தனர்.  அப்போது காலை 10.20 மணிக்கு சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையை மணந்தார். பின்னர் அபிஷேகங்கள், சரவிளக்கு, கும்ப தீபாராதனைகள் நடந்தது. அப்போது ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் சேர்ந்த திருமாங்கலய பிராசாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
        முன்னதாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. மேலும் மாலையில் ஊஞ்சள் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் கந்தசசஷ்டி திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன்திருப்பதி, சத்திரப்பட்டி போலீசார் செய்தனர்.
(1)படவிளக்கம்: ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
(2) படவிளக்கம்: ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண காட்சியை காண வந்த பக்தர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து