முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,அரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்கள் மேலும் சிலவற்றை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு பங்களிக்கும் வகையில் இருந்த முகநூல் பக்கங்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரணை நடத்தி வந்தது. இந்த பக்கங்களுக்கும் ரஷ்யாவின் இணைய ஆராய்ச்சி அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.இடைத் தேர்தலுக்கு முந்தைய நாளன்று 30 முகநூல் பக்கங்களையும், 85-க்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அந்த பக்கங்கள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம், எதிர் பிரச்சாரம் செய்வன என்று காவல் துறை அளித்த தகவலின் படி, பேஸ்புக் நிறுவனம் இந்த முடிவை எடுத்தது. அதையடுத்து அந்த பக்கங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மேலும் சில முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து