முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா சட்ட சபை தேர்தல்: சந்திரசேகர்ராவ் வேட்பு மனு தாக்கல்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலங்கானா மாநிலத்தின் காபந்து முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், கெஜ்வால் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட  வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

சித்திப்பேட் மாவட்டம் கொய்னப்பள்ளியில் அமைந்துள்ள பாலாஜி கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி முன்னிலையில் அவர் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வண்டேறு பிரதாப் ரெட்டி போட்டியிடுகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பிரதாப் ரெட்டி வாய்ப்பு கோரினார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகிய ரெட்டி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத்தாக்கலுக்கு பிறகு சந்திரசேகர ராவ் கூறியதாவது:

 முன்பு சுவாமி பாலாஜியை வணங்கிய பிறகே தனித் தெலங்கானா இயக்கத்தை தொடங்கினேன். நான் எப்போதும் தேர்தல் போர்களத்துக்கு செல்லும் முன்பு கடவுளையும், மக்களையும் வணங்கிய பிறகே களம் இறங்குவேன். மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே தெலங்கானா மாநிலத்தை பெறுவதில் வெற்றியடைந்தேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடவுளின் அருளாலும், மக்களின் ஆசியோடும் 100 இடங்களில் டி.ஆர்.எஸ். வெற்றி பெறும். தெலங்கானா மாநிலத்தில் மட்டுமே தலித்துகளும், பழங்குடி இனத்தவர்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். விவசாயிகள் வளமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து