முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: விசாரணையில் எளிமையாக பதிலளித்து விட்டேன் என்கிறார் டிரம்ப்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணையில் எளிமையாக பதிலளித்து விட்டேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது,ராபர்ட் முல்லரின் கேள்விகளுக்கு எளிமையாக பதிலளித்து விட்டேன். நீங்கள் எப்போதும் தவறான கண்ணேட்டம் உள்ளவர்களுக்கு கவனமாக பதிலளிக்க வேண்டும். நான் இதுவரை எனது பதில்களை விசாரணையாளரிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்தார். கடந்த 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ -மெயில்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலாரியை தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பியதாக ஜனநாயக கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இறுதியில்  டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் விசாரணை குழுவின் சிறப்பு விசாரணை அதிகாரியாக ராபர்ட் முல்லர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து