முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதி நவீன ஆயுதத்தை பரிசோதித்து உள்ளோம் வடகொரியா அரசு செய்தி நிறுவனம் தகவல்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்தத் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:-வட கொரியாவின் பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் சோதனைத் தளத்துக்கு அதிபர் கிம் ஜோங்-உன் அண்மையில் வருகை தந்தார்.அங்கு, புதிதாக உருவாக்கப்பட்ட அதி நவீன ஆயுதமொன்றின் சோதனையை அவர் பார்வையிட்டார். அந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது என்று கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், அந்த ஆயுதம் மற்றும் சோதனை குறித்த விவரங்களை அந்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து