முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 21-இல் பிரசாரம் தொடங்குகிறார் அமித்ஷா

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ஆம் தேதி முதல் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் ஆச்சார்யா கூறுகையில், அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள் குறித்து அந்தந்த தொகுதியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தப் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலையொட்டி இதுவரை ஆளும் பா.ஜ.க. சார்பில் இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 11-ஆம் தேதி 131 தொகுதிகளுக்கும், 14-ஆம் தேதி 31 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள 200 தொகுதிகளில் இதுவரை 162 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து