முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வியட்நாம் பயணம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாமுக்கு  இன்று செல்கிறார். பின்னர், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இந்தச் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் விஜய் தாக்குர் சிங், டெல்லியில் செய்தியாளர்களிடம்   கூறியதாவது:

முதல்கட்டமாக ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் வியட்நாமின் டா நாங் பகுதிக்கு  செல்கிறார். அவர் ஆசியான் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். உலக பாரிம்பரிய சின்னம் இருக்கும் மிசன் பகுதிக்கும் அவர் செல்கிறார். வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லும் ராம்நாத், ராணுவ வீரர்களின் நினைவிடத்துக்கும், வியட்நாம் முன்னாள் அதிபர் ஹோ சி மின்னின் கல்லறைக்கும் சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.

வியட்நாம் அதிபர் நிகுயென் பு டிராங், பிரதமர் நிகுயென் ஸுவான் புக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வியட்நாம் நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்துகிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பிறகு, அந்த அவையில் உரை நிகழ்த்தும் வெளிநாட்டு தலைவர் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் ஆவார்.

அந்நாட்டிலிருந்து அவர் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு 24-ஆம் தேதி வரை அவர் இருப்பார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து