முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு அடுத்தமுறை 'கொரில்லா' பாணியில் செல்வேன்: திருப்தி தேசாய்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி,சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யாமல் திரும்ப கூடாது  என்ற முடிவுடன் இருந்தேன். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினேன். போலீஸார் என்னை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு எனது திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளேன். மீண்டும் சபரிமலைக்கு வருவேன்  என்று சமூக ஆர்வலர்  திருப்தி தேசாய் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:நான் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன், ஆயிரக்கணக்கானோர் ஆபாச வார்த்தைகளைக் கூறி எனக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், என்னை திரும்பச் செல்லுமாறு மிரட்டினர். மேலும் எதுவும் நடக்கலாம் என கேரள போலீஸாரும் எங்களை அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். எங்களால் இம்மாநில மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக மட்டுமே நாங்கள் அங்கிருந்து திரும்பினோம். அடுத்த முறை வரும்போது எங்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்குவதாக கேரள போலீஸார் உறுதியளித்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் ஐயப்ப பக்தர்களாகவே இருக்க முடியாது. அதிலும் ஆபாச வார்த்தைகளைக் கொண்டு எங்களை மிரட்டினர். எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம் என்றால் நிலக்கல் பகுதியில் ஏன் போராட்டம் நடத்தவில்லை.

ஏனென்றால் நிலக்கல்லை நாங்கள் அடைந்துவிட்டால், பம்பா வழியாக ஐயப்ப சன்னிதானத்தை தரிசித்துவிட்டுத்தான் நாங்கள் திரும்பி இருப்போம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அச்சம் காரணமாகவே எங்களை விமான நிலையத்திலேயே தடுத்துவிட்டனர்.தற்போது முறையாக தெரிவித்துவிட்டு வந்ததால் தான் இதுபோன்று நடந்தது. ஆனால் அடுத்த முறை யாருக்கும் தெரியாமல் 'கொரில்லா' (எதிர் தரப்பை எல்லா திசைகளில் இருந்தும் திடீரென தாக்குவது) திட்டத்தைப் பயன்படுத்தி சபரிமலை செல்வது உறுதி என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து