முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜா புயல்' பாதித்த நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பயணம் மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

சீரமைப்பு பணி...தமிழகத்தை ஒருவாரத்திற்கும் மேலாக அச்சுறுத்திய ''கஜா புயல்'' நேற்று முன்தினம் அதிகாலை நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. இதன் காரணமாக தஞ்சை நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 29,500 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 448 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 'கஜா புயல்' பாதித்த 10 மாவட்டங்களில் 20,442 குடிசைகள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் அதிகபட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தொலை தொடர்பு...நாகை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிராமபட்டினம், திருத்துறைபூண்டி, பேராவூரணி ஆகிய ஊர்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொலை தொடர்பு 100 சதவீதம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் மொபைல் செல்போன் கோபுரங்கள் மூலம் தொலை தொடர்பு வசதிகளை தற்காலிகமாக அமைத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் வாழைகள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை...திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் சாய்ந்து விழுந்துள்ளன.  'கஜா புயல்' மற்றும் அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

10 ஆயிரம் ஊழியர்கள்... இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் ஒரு லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. ஏராளமான வன உயிரினங்கள், கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவ முகாம்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். மின்சேதங்களை சீரமைக்கும் பணியில் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நேரில் ஆய்வு.....கஜா புயலால் 30 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை. கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை நாளை (இன்று) நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து